ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி (சத்தான மற்றும் சுவையானது) | How to make Oats Idli (Nutritious & Tasty)
![]() |
ஓட்ஸ் இட்லி (சத்தான மற்றும் சுவையானது) / Oats Idli (Nutritious and Tasty) |
குறிப்பு: உடல் பருமன் குறைக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை தினமும் இருமுறை 40 கிராம் அதாவது (1/2 கப்) சாப்பிட்டால் இரும்பு சத்து, எதிர்ப்பு சக்தி, கொலஸ்ட்டரால், உடல் இடை, அதிக ரெத்த அழுத்தம், நீரழிவுக்கு உகுந்த உணவு.
தேவையான பொருட்கள் (ஒரு நபர் உண்பதற்கு) :
- ஓட்ஸ் - 1/2 கப்
- ரவை (விருப்பவுள்ளவர்கள்) - 1/2 கப்
- தயிர் - 1 கப்
- சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 1/2 கப் (தேவையான அளவு)
செய்முறை விளக்கம் :
ஓட்ஸ், ரவை, தயிர், சமையல் சோடா மற்றும் உப்பு ஆகிய பொருட்களை 1/2 கப் தண்ணீரில் கலக்கி, கெட்டியான மற்றும் மென்மையான மாவை தயாரிக்கவும்.
10 நிமிடம், மாவை நன்றாக ஊற விடவும்.
மாவு ஊறியபின் இட்லி தட்டில் ஊற்றி 10-15 நிமிடங்கள், ஆவியில் வேக வைக்கவும். சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
ஓட்ஸ் இட்லி (Tips) :
- கை விட்டு மாவை கலக்கி வைத்தால் சீக்கிரம் மற்றும் நன்றாக ஊறிவிடும்.
- தேவை என்றால் இட்லி தட்டில் ஒவ்வொரு இட்லிக்கும் மாவு ஊற்றுவதற்கு முன்பு அதில் முந்திரிப்பருப்பு / பாதாம்ப்பருப்பு துண்டுகள் போட்டு அதன் பின் மாவு ஊற்றலாம்.
- தினம் இருமுறை ஓட்ஸ் உண்டால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஜின்க், புரதம், மெக்னீசியம் ஆகிய அனைத்து முக்கிய சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
- ஓட்ஸ் (நார்ச்சத்து) அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் இருக்காது.
நன்றி 🙏
Post A Comment: