சேமியா கேசரி செய்வது எப்படி | How to make Semiya Kesari (Vermicelli Kesari)
தேவையான பொருட்கள் :
- சேமியா - 500 கிராம்
- சர்க்கரை - 400 கிராம்
- தண்ணீர் - 4 கப்
- நெய் - 300 கிராம்
- முந்திரி பருப்பு - 10
- ஏலக்காய் - 4
- கேசரி கலர் பவுடர் - சிறிதளவு
செய்முறை விளக்கம் :
சேமியா , முந்திரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். அதை வறுத்த பின்பு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்,
தண்ணீர் கொதித்த பின்பு சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரிப் பருப்பு, மீதியுள்ள நெய், கேசரி கலர் பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும்.
பிறகு ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும், பின்னர் குவளை தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பரிமாறவும்.

நன்றி 🙏
Post A Comment: