ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup

Share it:

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup

ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup


தேவையான பொருட்கள் :

  • ஆட்டுக்கால் - 4
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகு - 3 தேக்கரண்டி
  • மல்லி (தனியா) - 2 தேக்கரண்டி
  • பல் பூண்டு - 5
  • மஞ்சள் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை விளக்கம் :

      4 ஆட்டுக்கால்களை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்,
    சீரகம், மிளகு, மல்லி, சின்ன வெங்காயம், பல் பூண்டு இவற்றை அரைத்துக்கொள்ளவும்.

      பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 டம்ளர் ஆக்கவேண்டும், இத்துடன் அரைத்த மசாலா, ஆட்டுக்கால் துண்டுகள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து குக்கரில் விசில் போட்டு வேக விடவும்.

      விசில் சப்தம் கேட்டு 20 நிமிடங்கள் கழித்து குக்கரை இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் (நல்லெண்ணெய்) ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வாய்த்த ஆட்டுக்கால் கறியுடன் சேர்த்து கிளறவும்.


    ஆட்டுக்கால் சூப் (Tips) :


    1. மஞ்சள் கிருமி நாசுனியாக செயல்படும்.
    2. தண்ணீர் ஊற்றியபின் விசில் போடாமல், சிறிதளவு வேக விட்ட பின் விசில் போட்டு மூடுவது நல்லது.
    3. ஆட்டுக்காலுடன் சிறிதளவு இஞ்சியை தள்ளி போட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், உடலுக்கு வலு சேர்க்கும்.



    நன்றி 🙏
    Share it:

    Classic

    Healthy

    Indian Cuisine

    Indian Recipes

    Mutton

    Non Veg

    Soup

    Soup Recipes

    Post A Comment: