முட்டை ஆம்லெட் செய்வது எப்படி | How to make Egg Omelette
குறிப்பு : 2 ஆம்லெட் தயார் செய்ய
தேவையான பொருட்கள் :
- முட்டை - 4
- சிறிய வெங்காயம் (அல்லது) பெரிய வெங்காயம் - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 4
- மிளகுத்தூள், சீரகத்தூள் - 1 டீஸ் பூன்
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ் பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை விளக்கம் :
முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கலக்கிக்கொள்ளவும். சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை சிறிதாக வெட்டி கொள்ளவும் (அல்லது இடித்து வைத்து கொள்ளவும்).
அடித்து கலக்கி வைத்துள்ள முட்டையில், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை முதலியவற்றை நன்றாக கலந்து.
தோசை கல்லில் (அல்லது) தவாவில் எண்ணெய் ஊற்றி, தோசை கல் நன்றாக சூடேறிய பிறகு வட்டமாக தோசை வடிவில் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும், இரு பக்கமும் மாற்றி போட்டு வேகவிடவும்.

முட்டை ஆம்லெட் (Tips) :
- சிறிய வெங்காயம் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக உடல் சூட்டை குறைக்கவும் இதயத்திற்கு நல்லது மற்றும் முட்டை ஆம்லெட்யின் ருசியையும் மணத்தையும் அதிகரிக்கும்.
நன்றி 🙏
Post A Comment: