முந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (எண்ணெய் இல்லாமல்) செய்வது எப்படி | How to make Baked Cashew Nuts / Roasted Cashew Nuts (without Oil)
- முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
குறிப்பு : ஓவென் இல்லையென்றால், இதை தவாவில் செய்யலாம்.
செய்முறை விளக்கம் :
முந்திரிப்பருப்பில் சிறிது உப்பைத் தண்ணீரில் கரைத்து விரவவும். ஓவனில் உள்ள தட்டில் இந்த முந்திரிப்பருப்பை பரப்பி 150 டிகிரி சூட்டில் வேக வைக்கவும். இரண்டு முறை முந்திரிப்பருப்பை கிண்டி விடலாம்.
முந்திரிப்பருப்பில் உள்ள கொழுப்புச் சத்திலே பருப்பு நன்றாக ரோஸ்டாகிவிடும். முந்திரிப்பருப்பு அதிகம் சிவக்கும் முன்னர் எடுத்து, வெளியேய் பரப்பி வைக்கவும்.
தவாவில் செய்பவர்கள், மிதமான சூட்டில் அதிகம் கிண்டி விட்டு கருகாமல் மிதமாக வறுத்து எடுங்கள்.
சூடு ஆறியவுடன் டின்னில் அடைத்து உபயோகிக்கலாம், விலைக்கு வாங்கும் முந்திரிப்பருப்பு போலவே இருக்கும், எண்ணெய் எதுவும் சேர்க்காததால் இது மிகவும் சத்தானது மற்றும் பாதுகாப்பானது.

முந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (Tips) :
- முந்திரிப்பருப்பு அதிகம் சிவக்காமல் (கரிந்து போகாமல்) பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது முந்திரிப்பருப்பின் கொழுப்பு சுவையில் மாற்றம் ஏற்படும், அதன் ருசியை இழந்துவிடும்.
- தவாவில் வறுப்பவர்கள் அளவான சூட்டில் மிதமாக கவனமாக வறுத்து எடுங்கள்.
நன்றி 🙏
Post A Comment: